|
சிறப்புப்
பாயிரம்
|
|
|
3. |
ஈட்டிய
வெண்ணெண் கலையோ டியலிசை நாடகமும்
காட்டிய போதக் குறுமுனி 1யாதி கலைஞர்கண்ட
பாட்டிய லானவை யெல்லாந் தொகுத்துப் பயன்படவே
நாட்டிய வேதத் தவனவ 2நீத நடனென்பரே. |
(உரை II). எ - று. அளவில்லாமல் இருக்கப்பட்ட அறுபத்து நான்கு
கலைகளையும் ஆராய்ந்து, இயலிசை நாடகமென்று முத்தமிழையும் உரைத்த
குறுமுனியாகிய அகத்திய முனிவர் திருவாக்கில் உண்டாக்கப்பட்ட
3பருணர்பாட்டியல் என்னும் பரப்பினை விரிந்த
நூலுணர்
மேதினியோர்க்குப் பயன்படப் பாட்டியலென்று தொகுத்துரைத்தான் நவநீத
நாட்டு அரிபத்தனான சிறப்புப் பெயருடைய ஆசீர்வாத முள்ளான் நவநீத
நடனென்னும் இயற்பெயரையுடையோன் எ - று.
(கு - ரை.).
பருணர்பாட்டியல் என்ற ஒன்றை அகத்திய முனிவர்
செய்ததற்கு இவ்வுரையன்றி வேறு ஆதாரம் இதுவரையிலும் தெரியவில்லை.
இந்நூலாசிரியர் அரிபத்தரென்பது இவ்வுரையால் மட்டுமன்றித்
தற்சிறப்புப்பாயிரத்தில் திருமால் வணக்கம் கூறப்படுவதாலும், நவநீத நடன்
என்ற பெயராலும் புலனாகும். நாட்டிய வேதத்தவன் - நிலைபெறச்செய்த
மறையவன். நவநீதநடன் என்பது கண்ணபிரானுக்கு அமைந்த பெயர்களில்
ஒன்று ; நவநீதம்-வெண்ணெய் ; வெண்ணெய்க்காக நடஞ்செய்தவன்;
‘பாவையர் மனைதொறும் வெண்ணெய்க் காடினான்’; ‘நறு வெண்ணெய்
ஆயர் மங்கைய ரிடவிட வமுதுசெய் தாடிய திருக்கூத்தும் ’ (வி. பா. இராச.
119. நச்சுப். 1.). என்பர் - என்று சொல்லுவர். ஏ : அசை. ‘நடத்தினனே’
என்ற பாடப்படி, ‘நவநீதன் தொகுத்துப் பயன்படநடத்தினன்’ எனக் கூட்டுக ;
நடத்தினன் நிமழ்த்தினன்; “யானா நடாத்துகின் றேனென் றெனக்கே
நகைதருமால்” (யா. கா. தற்சிறப்பு. 2.). இவ்வுரை கொள்ளுமிடத்து, ‘ நாட்டிய
வேதத்தவன் ’ என்பதற்கு, ‘நாட்டிய சம்பந்தமான வேதத்தையுடையவன்’
என்று பொருள் கொள்ளுக. ‘நாட்டிய வேதா’ என்ற தொடர் வடமொழியில்
அந்தணர் முதலிய பல சாதியினர்க்கும் வழங்கப்பெறும், (2)
[நாட்டிய
வேதத்தினன், நட்டுவனைக் குறிப்பதும் ஆம்]. |
(பி - ம்.) 1 ‘யாகக்’ 2 ‘நீத நடனென்பனே’,
‘நீத னடத்தினனே’,
‘நாட்டு நவநீதனே’ 3‘பருணப் பாட்டியல்’
பாயிரமும்
அவையடக்கமும் முற்றும்.
|
|