பக்கம் எண் :
 

பொருத்தவியல் 1

1.பொருத்தவியல்
   
 
முதன்மொழிப் பொருத்தம்
   
1. மங்கலஞ் சொல்லெழுத் தெண்ணிய தானம் வருமிருபாற்
பொங்கிய வுண்டி வருணம் பகுத்திடு நாட்பொருத்தம்
தங்கிய நாற்கதி யெண்கண மென்று தமிழ்தெரிந்தோர்
இங்கிவை பத்தும் முதன்மொழி யாமென் 1றியம்புவரே.

     (உரை I). எ-து, சூத்திரம்; எ-ன், மங்கலம் முதல் கணம் ஈறாகக்
கிடந்த பத்தும் முதன்மொழி யென்பது உணர்த்......று. அவைதாம் மங்கலம்,
சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம் என
இவை பத்தும் எ - று.

     (உரை II). ஒருவன் ஒரு பிரபந்தம் பாடுமிடத்து மங்கலம்......கணம்
என்று சொல்லப்பட்ட பத்துவகைப் பொருத்தமும் பிரபந்த முதற்சீர்க்கண்
உண்டாக்க வேண்டுமென்று சொல்லுவர்.

     (கு - ரை.). இருபால் : ஆண் பெண் அலி எனப் பால் மூன்றாக
(சூ. 7) இருக்க இங்கே இருபால் என்றது முதன்மொழிப் பொருத்தத்துக்கு
ஏற்ற ஆண் பெண் பால்களை நினைத்தென்க. பொருத்தமென்பதை
இடைநிலை விளக்காகக் கொண்டு மங்கலம் முதலிய ஏனை ஒன்பதனோடுங்
கூட்டுக. நாற்கதி ; சூ, 20, 21. எண்கணம் - எட்டுக்கணம் ; 22-3. (1)

     (பி - ம்.) 1 ‘றியம்பினரே’

மங்கலப் பொருத்தம்
   
2. திருமணி பூத்திங்க ளாரணஞ் சொற்சீர் எழுத்துப்பொன்றேர்
வருபுனல் கார்புயல் மாநிலங் கங்கை மலையுலகம்
பரிகடல் யானை பருதி யமுதம் புகழ்முதற்சீர்க்
குரியநன் மங்கலம் சொல்லென்று நாவலர் ஓதினரே.

     (உரை I). எ - ன், திரு, மணி, பூ, திங்கள், ஆரணம், சொல், சீர், எழுத்து, பொன், தேர், புனல், கார், புயல், நிலம், கங்கை, மலை, உலகம், பரி, கடல், ஆனை, பருதி, அமுதம், புகழ் ஆக இருபத்துமூன்று மங்கலச் சொல் முதற்சீருக்கு வைக்கலாம்.