புகழ்
சீர்த்தி கீர்த்தி எனலும் ஆம்.
தேர், பரி, களிறு, ஆரணம், ஞாயிறு, என்பன எல்லாரும்
உடன்படாமையினால் சிறப்பில்லையெனத் தெரிந்து கொள்ளுக இவை பிறவும்
சொன்னவற்றினோடு கொள்ளுக.
சங்கு
சக்கரம் மதியம் அரிமா
இடபம் வெள்ளம் அரசன் நிறைகுடம்
தோட்டி விளக்கு வட்டி கடல்சூலம்
நாவாய் தாமரை (?)
செயிர்தீ ரிலேகை திருப்பொறி யாகும் |
இவையும் முதன் மங்கலச்
சொல்லுக்கு வைக்கப்படும் எ - று.
(உரை II).
திரு................புகழ் என்று சொல்லப்பட்ட இருபத்துமூன்று
சொல்லும் ஒரு பிரபந்தத்துக்கு முதற்சீர்க்கண் வைக்கலாம். வைக்குமிடத்துப்
பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்துக்கும், பிரபந்த முதற்சீர்
முதலெழுத்துக்கும் மற்ற ஒன்பது பொருத்தமும் உண்டாகிய மங்கலச்சொல்
வைத்துக்கொள்ளுக.
(கு - ரை).
சீர்த்தி கீர்த்தி என்பன புகழின் பரியாயப் பெயர்கள்.
பரியாய நாமம் வரினும் இழுக்காது (வெண்பாப். 1, 2, உரை). மங்கல மொழி
அடையடுத்து வருதலுமுண்டு (முருகு. 1, அடிக்.); சங்கு
சக்கரம்...........................யாகும் : இது சிறிது வேறுபாடுகளுடன் திவாகரம்
12-ல்
கீழ்வருமாறு காணப்படுகிறது:
சங்கு சக்கரம் மதியம் அரிமா இடபம், வேழ மாசநம்
நிறைகுடந்
தோட்டி, விளக்கு முடிகடல் சூலங் கொடியே, தாமரை செயிர்தீ ரிலேகை
திருப்பொறி, யாகு மென்ப ரறிந்திசி னோரே(2)
|
சொற்
பொருத்தம்
|
|
|
3.
|
*கங்கையு
மானுங் கடுக்கையுந் திங்களும் காப்புடைய
துங்கன் முகினிற வண்ணனும் வேலையிற் றொல்கதிரும்
ஐங்கரத் தற்புதன் றன்னையு மாறு முகத்தனையும்
பங்கயத் தோனையுங் கூறுக பாவிற் பரிவுடனே. |
(உரை
II). எ - து. சொற்பொருத்தம் ஆமாறு உணர்த்...று.
|