உரையில் இலக்கணக் குறிப்புக்கள் மேற்கோட்பாட்டுக்கள் முதலியனவும்
எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.
இவ்வுரையின் சிறப்பு அறிஞர்க்கு
நவிறொறும் நயங்காட்டுவது. ஆனால் நக்கீரரால்
உரையெழுதப் பெற்றதோ
என, ஐயுறற்கு இடனாக இருக்கின்றது. என்னையெனின், நக்கீரர் காலம்
கடைச்சங்க காலம் என்பது யாவரும் நன்கறிந்த உண்மை. கோவைகள்
எழுந்த காலம், பிற்காலம்.
கோவைகள் யாவும் கட்டளைக் கலித்துறையால்
அமைந்தன. தொல்காப்பியர் காலத்திலோ அதற்குப்
பிற்பட்ட காலத்திலோ
கட்டளைக் கலித்துறை பயிலவில்லை. தொல்காப்பியச் செய்யுளியலில்
இக்கலித்துறைக்கு விதியும் அமைக்கவில்லை. சங்ககால நூல்களான
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
முதலிய நூல்களில் யாண்டும் இப் பா வரக்
காண்கிலோம். அவ்வாறிருப்ப இந்நூலின் உரைக்குக்கீழ்
உதாரணத்துக்குக்
கட்டளைக் கலித்துறையானியன்ற கோவைத் துறை கொண்ட பாடல்கள்
காட்டப் பெற்றுள்ளன. அன்றியும், முதற் சூத்திர உரைக்கண், (பக்கம்: 8)
மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற்
செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால்
உரை கண்டு, குமார சுவாமியாற் கேட்கப்பட்டது என்க’
என்று கூறுவதையும்,
ஏழாம் சூத்திரத்து உரைக்கண், விளக்கம் உரைக்கும்போது செலவுச்சொல்
கொடுத்துக் கூறவேண்டுமென்பதற்குத் தாம் பாடிய பாடலாக (அகம்: 36)
பாடலில் வந்துள்ள
‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ என்ற அடியை
யெடுத்துக் காட்டி ‘என்று சான்றோர்
சொல்லியது’ (பக்கம் : 74) என்று
கூறியிருப்பதையும் நோக்கினால், இவர் தம்மையே இவ்வாறு
மாற்றிக்
கூறுவரோ என்னும் எண்ணம் உந்த நக்கீரர் உரை தானோ? என்ற ஐயம்
எழுகின்றது.
ஆராய்ச்சி யுலகு இதனை ஆய்ந்து தெளிக.
இதில், சங்ககாலத்துப் பயிலாத வடசொற்கள், பிற்காலத்து
வழக்காற்றிற்கு வந்தன, யாண்டும்
விரவிக்கிடத்தலையும் ஆங்காங்கே
காணலாம். காட்டாகச் சில காட்டுதும்: ‘சிட்டரை எல்லாம்
கூவி’ (பக்கம்: 6)
என்பதில், ‘சிட்டர்’ எனவும், ‘பிராமணன் சிந்திப்பான்’ (பக்கம்
: 7)
என்பதில், ‘பிராமணன்’ எனவும், ‘நுமக்கோர் காரணிகனை யான் எங்ஙனம்
நாடுவேன்’
(பக்கம்: 8) என்பதில், ‘காரணிகன்’ எனவும், ‘நக்கீரனாரால்
உரைகண்டு
குமாரசுவாமியாற் கேட்கப்பட்டது என்க’ (பக்கம்: 8) என்பதில்,
‘குமாரசுவாமி’ எனவும்,
‘கொழுவும் புரளியும் மூத்திர புரீடங்களும் என்று
இவற்றது இயைபு’ (பக்கம்: 1) என்பதில்,
‘மூத்திரபுரீடம்’ எனவும்,
‘கணவனொடு செத்தவர் சுவர்க்கம் புகுவார்’ எனவும், (பக்கம் :
16)
என்பதில், ‘சுவர்க்கம்’ எனவும், ‘பார்ப்பானாகலின் பன்மை வாசகத்தாற்
சொன்னாரென்பது
என்பதில்
|