முகப்புதொடக்கம்
2முகவுரை

பிறபாஷைகளிலில்லாத எண்ணிறந்த பலவேறுவகையான பாடல்களையும் பிரபந்தங்களையு முடையதாய்ச் செய்யுணடையிற் சிறந்து விளங்குந் தமிழ்மொழிக்கண்ணே செய்யுளுக்கின்றியமையாத பொருள் யாப்பிலக்கணங்கள் பிறிதொரு பாஷையிலிருந்து கொள்ளப்பெறாது தமிழுக்குரியவாய்த் தனியே சுயமாயிருக்கும்பொழுது அவற்றோடொத்த அணியிலக்கணப் பகுதிமட்டு மந்நியபாஷையிலிருந்து வந்ததாகச் சொல்லுவ தநாதரிக்கத்தக்கதே.

அன்றியும், திருவெங்கையுலாவில்,

“. . . . . . . . . . . . . . . . . மல்லலுறச்
சந்திபொருத்தித்தகுஞ்சீர்கெடாதடுக்கிப்
புந்திமகிழற்புதவணித்தா--முந்தையோர்
செய்யுள்போற்செய்ததிருக்கோயில்”

என்றதனால், மனமகிழ்ந் ததிசயிக்கவல்ல சிறந்த அலங்காரங்களைப் பழமையான பாசுரங்களே யுடையனவென்றும், அப்பாசுரங்கள் தெய்வ சாந்நித்தியம் பெறுதற்கு அலங்காரங்கள் உறுப்பாயமைந்துள்ளனவென்றும், ஆதலா லவை தேவாலயத்துக் குவமிக்கத்தக்கனவென்றும், நூன்முறையே செவ்விதிற் செய்யப்பட்ட கோயில் போல் விளங்குவதாற் பாசுரங்கள் செய்யுளெனப்படுமென்றும் ஆலங்காரிகசார்வபௌமரான சிவப்பிரகாச முனிவரு மபிப்பிராயந்தந்து போந்தனர்.

இதனால், கோயிலுள் நூன்முறையானமைக்குங் குணாலங்காரம் (வடிவழகு) போலச் செய்யுளுள்ளும் நூன்முறையானமைக்குங் குணாலங்காரங்களுண்டென்றும், கோயிலுள், தெய்வபிம்பம் தீபஜாலம் உத்ஸவ பரிகர முதலியவற்றானமைக்கும் பொருளழகுபோலச் செய்யுளுள்ளும் உவமை உருவக முதலிய பொருள் வகையானமைக்கும் அர்த்தாலங்காரங்க ளுண்டென்றும், கோயிலுள் வர்ணவிசேஷங்களாலமைக்கும் சித்திர கலாபங்கள் போலச் செய்யுளுள்ளும் வர்ண (அக்ஷர) விசேஷங்களா லமைக்கும் சப்தாலங்காரங்களுண்டென்றும், கோயிலுள் ஒரோவழி நிகழ்ந்த படிவரையும் விகிருதரூபங்கள்போலச் செய்யுளுள்ளும் ஒரோவழி நிகழ்ந்த படிவரையும் தோஷாலங்காரங்களுமுண்டென்றுங் குறிக்கப்படுகின்றன. இவையெல்லாம் முந்தையோர் செய்யுளிற் பல இடங்களிலும் காணப்படுதலா லவற்றிற் கிலக்கணமில்லாதிருந்ததென்று கொள்வது

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்