இப்புத்தகம் அச்சிட்டுவெளிவரும்படிக்குப் பிரதிக ளளித்துதவிய மஹோபகாரிகளான ஆழ்வார்திருநகரித் தாயவலந்தீர்த்தான்கவிராயர் குடும்பத்தார்க்கும், மஹாமஹோபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதைய ரவர்களுக்கும், புதுக்கோட்டை மஹாராஜாகாலேஜ் பிரின்ஸிபாலாயிருந்த ஸ்ரீமத்-எஸ். இராதாகிருஷ்ணையர், B.A., F.M.U., அவர்களுக்கும், பரங்கிப்பேட்டை ப.அ. இலக்குமணப்பிள்ளையவர்கள் குடும்பத்தினர்க்கும் தமிழ்ச்சங்கத்தாரும், தமிழபிமானிகளும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இந்நூற் பரிசோதனை விஷயமாகவும், அச்சிடும் விஷயமாகவும் சுருசுருப்பாயும் ஜாக்கிரதையாயுமிருந்து பிரதிகளையொப்பு நோக்கியும், எழுதியும், பிழைதிருத்தியும், மேற்கோள்களைப் பிறநூல்களினின்று இடங்கண்டு தேடியெடுத்துக் கொடுத்தும், பிரதிகளிலில்லாத சித்திர பத்திரங்களை இவ்வாறிருக்கவேண்டுமென்று ஊகித்தெழுதிக் கொடுத்தும், உதவிபுரிந்து வந்த பத்திராதிபருதவி ராமாநுஜஐயங்காரது வேலைத் திறமை பாராட்டற்பாலது. இந்நூலையச்சிடுதற்குரியனென் றெளியேனை மதித்துத் தமிழுலகுக்குக் குற்றேவல்புரியும் பெருவாழ்வுகொடுத்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தார்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அலங்காரசாஸ்திர நிபுணர்களால் ஆராயத்தக்க இந்நூலை யளியேனும் அச்சிட்டுதவுமாறு அறிவாற்றலையளித்துத் தலைக்கட்டிய ஸர்வே சுவரன்றிருவருளைச் சிந்தித்து வந்தித்து வாழ்த்துவேனாக. | திரு. நாராயணையங்கார் செந்தமிழ்ப்பத்திராதிபர். |
|