(சுலோகம்) இதன் மொழிபெயர்ப்பு, “உவமையென்னுந்தவலருங்கூத்தி பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம். |
இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது. “எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி” என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால், தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது. இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு, தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது. அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம், எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது. இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம். இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது. வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம். இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல், தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம். தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள் அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன. இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம். யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் |