முகப்புதொடக்கம்

ஸ்ரீ :

மாறனலங்காரம்

(------)

தற்சிறப்புப் பாயிரம்

தேனறாமகிழ்த்தொடையலுமௌலியுந்
       திருக்கிளர்குழைக்காதுங்
கானறாமலர்த்திருமுகச்சோதியுங்
       கயிரவத்துவர்வாயு
மோனமாகியவடிவமுமார்பமு
       முத்திரைத்திருக்கையு
ஞானதேசிகன்சரணதாமரையுமென்
       னயனம்விட்டகலவே.
(1)
   
பூமாதுமன்னும்புகழ்க்குருகூர்வாழ்புலவர்
      கோமானியற்பெயராற்கூறுமணிப் - பாமாலைக்
காரணனாஞ்செஞ்சொலலங்காரன்சோலைமலைக்
      காரணனாநாரணனேகாப்பு.
(2)
   
ஆக்கமுறக்காக்கபுகழ்மாறனலங்காரத்தைப்
      பூக்கமலத்தாண்மெய்புளகமெழ - நோக்குங்
குழகனெழிற்சோலைமலைக்கொற்றவனாஞ்சங்கத்
      தழகனருண்மாலலங்காரன்.
(3)
   
அழுக்காறிலராயழுக்கறுக்குங்கல்வி
      யொழுக்காருலகத்துளரா-லிழுக்கிலா
முற்பனுவல்கண்டுரைத்தேன்மொய்யிழாய்புன்மொழியு
      நற்பனுவலாமெனவேநான்.
(4)
   
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
      யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்-தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
      வேண்டுமேயீங்கிதற்குமேல்.
(5)
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்