முகப்புதொடக்கம்
  

2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்

478-ஆம்பக்கத்திலுள்ளது.

-------

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க--வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.

இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி, இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி, மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று, தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமேதிருமலை யென நின்றவாறு காண்க. ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.

------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்