நலங்கிளரொருதனிமுதலெனநாடிப் பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந் தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென வாறறியந்தணரருமறைப்பொருளா 
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள் ஞானபூரணககோதயநாவீற மானபூடணகுருகாபுரிவரோதய மறுசமயத்தவர்மத்தமால்யானையைத் தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர் 
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட விருசரணாம்புயத்தென்னையுமொன்றா யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத் திம்மாநிலத்தென்பொருட்டாற் கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது. இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும், பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க. பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது. ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க. |