16. கடகபெந்தம். 503-ஆம்பக்கத்திலுள்ளது. --------- கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா மூலமெனச்சென்றுதவுமுன்னோனே--நீலமணி வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க் கண்ணாசரணாகதி.
| இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி, மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று, அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமேகூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க. ---------- |