முகப்புதொடக்கம்
  

17. கடகபெந்தம் (வேறு)

503-ஆம்பக்கத்திலுள்ளது.

-------.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராசியிணையில்லா--தார்கணிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.

இது, பூட்டுவாய்நின்று வலப்பக்க மிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி யவ்வழியே மேலறையிலேறியிறங்கி வலஞ்சென்று இடை யிடையேயுள்ளகுண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்றுமீண்டு மிறுதியறை சென்று முடியுமாறு காண்க. இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும் சுத்தபாடந்தோன்றாமையாலும் பெந்தத்திற்குப் பொருந்துமாறு இங்குச் சிறிது வேறுபடுத்தியெழுதப்பட்டிருக்கிறது.

--------

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்