முகப்பு |
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் |
299. நெய்தல் |
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
||
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
||
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
||
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
||
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
||
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
||
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
||
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
378. நெய்தல் |
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
||
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
||
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
||
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
||
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
||
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
||
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
||
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
||
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
||
நாடாது இயைந்த நண்பினது அளவே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|