முகப்பு |
காவன் முல்லைப் பூதனார் |
104. பாலை |
அம்ம வாழி, தோழி! காதலர், |
||
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
||
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
||
பனி படு நாளே, பிரிந்தனர்; |
||
பிரியும் நாளும் பல ஆகுபவே! |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |