முகப்பு |
கிள்ளிமங்கலங்கிழார் |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. |
உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |
110. முல்லை |
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
||
யார் ஆகியரோ-தோழி!-நீர |
||
நீலப் பைம் போது உளரி, புதல |
||
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
||
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
||
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
||
இன்னாது எறிதரும் வாடையொடு |
||
என் ஆயினள்கொல் என்னாதோரே? |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார் |
152. குறிஞ்சி |
யாவதும் அறிகிலர், கழறுவோரே- |
||
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து |
||
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே? |
||
யாமைப் பார்ப்பின் அன்ன |
||
காமம், காதலர் கையற விடினே, |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார் |
181. குறிஞ்சி |
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
||
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
||
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
||
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
||
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
||
திரு மனைப் பல் கடம் பூண்ட |
||
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? |
உரை | |
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார் |