முகப்பு |
தூங்கல் ஓரியார் |
151. பாலை |
வங்காக் கடந்த செங் கால் பேடை |
||
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது, |
||
குழல் இசைக் குரல குறும் பல அகவும் |
||
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது, |
||
'மறப்பு அருங் காதலி ஒழிய |
||
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே. |
உரை | |
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி |
295. நெய்தல் |
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
||
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
||
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
||
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
||
பெரு நலக் குறுமகள் வந்தென, |
||
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |