முகப்பு |
மதுரை அளக்கர் ஞாழார் மகன் மள்ளனார் |
188. முல்லை |
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
||
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
||
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
||
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
215. பாலை |
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
||
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
||
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
||
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
||
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
||
கொடு வரி இரும் புலி காக்கும் |
||
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |