முகப்பு |
மோசி கீரனார் |
59. பாலை |
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
||
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
||
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
||
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
||
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
||
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. |
உரை | |
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
84. பாலை |
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்; |
||
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
||
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
||
வேங்கையும் காந்தளும் நாறி, |
||
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. |
உரை | |
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |