முகப்பு |
கண்டோர் |
7. பாலை |
வில்லோன் காலன கழலே; தொடியோள் |
||
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் |
||
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் |
||
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, |
||
வாகை வெண் நெற்று ஒலிக்கும் |
||
வேய் பயில் அழுவம் முன்னியோரே. | உரை | |
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார் |
229. பாலை |
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் |
||
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும், |
||
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, |
||
ஏதில் சிறு செரு உறுபமன்னோ! |
||
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல் |
||
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் |
||
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. | உரை | |
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார் |
390. பாலை |
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்- |
||
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!- |
||
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, |
||
வளை அணி நெடு வேல் ஏந்தி, |
||
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. | உரை | |
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன் |