உகாய்

274. பாலை
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.

உரை

பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன்

363. மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?

உரை

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன்