முகப்பு |
அடுப்பம்பூ |
243. நெய்தல் |
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் |
||
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை |
||
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. |
உரை | |
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன் |
349. நெய்தல் |
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
||
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
||
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
||
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; |
||
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
||
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், |
||
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? |
உரை | |
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
உரை | |
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் |
||