முகப்பு |
தாமரை |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. |
உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
376. நெய்தல் |
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில் |
||
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, |
||
வேனிலானே தண்ணியள்; பனியே, |
||
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, |
||
அலங்கு வெயில் பொதிந்த தாமரை |
||
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசிக் கொற்றன் |