முகப்பு |
அணில் |
41. பாலை |
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, |
||
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
||
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் |
||
புலப்பில் போலப் புல்லென்று |
||
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. |
உரை | |
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார் |
49. நெய்தல் |
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து |
||
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! |
||
இம்மை மாறி மறுமை ஆயினும். |
||
நீ ஆகியர் எம் கணவனை; |
||
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. |
உரை | |
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார் |