முகப்பு |
காளை (ஏறு, ஒருத்தல்) |
74. குறிஞ்சி |
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
||
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
||
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
||
வேனில் ஆனேறு போலச் |
||
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. |
உரை | |
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. |
உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
344. முல்லை |
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
||
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
||
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
||
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
||
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, |
||
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
||
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
||
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |
391. முல்லை |
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
||
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
||
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
||
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
||
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
||
கையற வந்த பையுள் மாலை, |
||
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
||
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
||
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! |
உரை | |
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |