முகப்பு |
அன்றில் |
57. நெய்தல் |
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
||
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
||
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
||
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
||
இருவேம் ஆகிய உலகத்து, |
||
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? |
உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? |
உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
301. குறிஞ்சி |
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
||
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
||
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
||
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
||
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
||
வாராதுஆயினும், வருவது போலச் |
||
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
||
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |