முகப்பு |
பருந்து |
207. பாலை |
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று, |
||
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
||
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
||
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
||
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
||
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |
283. பாலை |
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்; |
||
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச் |
||
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
||
சென்றனர் வாழி-தோழி-என்றும் |
||
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர் |
||
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த |
||
படு முடைப் பருந்து பார்த்திருக்கும் |
||
நெடு மூதிடைய நீர் இல் ஆறே. |
உரை | |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல் |
285. பாலை |
வைகா வைகல் வைகவும் வாரார்; |
||
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்; |
||
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர் |
||
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் |
||
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு |
||
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை |
||
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் |
||
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை | |
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன் |