முகப்பு |
இறால் (இறவு) |
109. நெய்தல் |
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
||
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
||
புணரிய இருந்த ஞான்றும், |
||
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! |
உரை | |
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? |
உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |
320. நெய்தல் |
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் |
||
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, |
||
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், |
||
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் |
||
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் |
||
புன்னைஅம் சேரி இவ் ஊர் |
||
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. |
உரை | |
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன் |