இந்நூலாலும் உரையாலும் தெரிந்த விசேடச் செய்திகள்

அணிகள் :- ஆரப்பூண், ஆழிமோதிரம், இருவடமேகலை, எண்வடக் காஞ்சி, கட்டுவடம், கடிப்பு, கழல், காஞ்சியணி, கால் மோதிரம், காழ், காற்சிலம்பு, குழை, கொக்குவாய், சுடுபொன், செறிக்கும் தோள்வளை, தலைக்கோலம், தலைக்கோல முத்து, தலைப்பாளை, திருக்கோவை, தோள்வளை, நாளணி, நித்தில அரிச்சிலம்பு, நித்தில மதாணி, பவழ மாலை, பவழ வளை, பொலங்கலம், பொற்பூ, பொன்மாலை, மகர குண்டலம், மகர வலயம், மத்தக நித்திலம், மதாணி, மார்பின் வடம், முச்சி, முத்தணி, மேகலை வகை, மேகலை வடங்களின் நூல், வளை.

ஆயுதங்கள்:- அம்பறாத்தூணி, குந்தம், செறியிலை யீட்டி, பாரவளை, பொலம்படை, மத்திகை, வாள், வாளிகள்.

உடைமுதலியன:- குடை, கொண்டை - கூந்தல் முடி, திலகம், துகிலிற் பூத்தொழில், துகிலினுள் மேகலை, தொய்யிற் கரும்பு, தொய்யிற் கொடி, புட்டகம் - நீராடற்குரிய புடைவை.

ஊர்திகள்:- அத்திரி, களிறு, சிவிகை, தண்டு ஆர் சிவிகை.

கதைகள்:- அகலிகை கல்லுருவானமை, அமரர்க்கமுதருத்தியது, அவுணர் கடலிற்பாய்ந்தது, அன்னச்சேவலாகித் திருமால் மழையை வற்றச் செய்தது, இந்திரன் இமயத்தைக் காத்தல், இந்திரன் சாபமேற்றது, இறைவன் திரிபுரத்தைச் செற்றது, உருப்பசிகுதிரைப் பெட்டையானமை, கடல் கடைந்தது, கருடன் வினதை சிறைமீட்டது, திருமால் கருடன் செருக்கை அடக்கியது, தேவமருத்துவரின் பிறப்பு வரலாறு, பிரமன் கங்கையைப் பூமிக்கு அளித்தது.

குன்றங்கள்:- இமயம், குருகெனப் பெயர்பெற்ற மால்வரை, சூருறை குன்று, சையமலை, சோலைமலை, திருமால் குன்றம், திருமாலிருஞ்சோலை (இருங்குன்று), திருவரை (அழகர் மலை), நெடுங்குன்றம், பரங்குன்று, மேருமலை.

சபைவகைகள் முதலியன:- அம்பலம், அரங்கு, எழிலம்பலம், எழுத்து நிலைமண்டபம், சிரமச்சாலை - ஆயுதம் பயிலும் இடம்.

சாதிகள்:- அந்தணர், உழவர், காதற்பரத்தை, காருகப் புண்ணிய வணிகர், கீழோர், குறிஞ்சி நில மாக்கள், குன்றவர், கொடிச்சியர், கொடிச்சென்னியர் - பாணர், பாண்சாதி, யாழ்ப்பாணர், விலைக் கணிகையர், வேளாளர்.