நீரிற்
செலுத்தும் ஊர்திகள் முதலியன:- அம்பி, அரக்கு
நீர் வட்டு, இதை, எக்குவ, எறிவன, ஓடம், கிடைத்தேர்,
கிடைமாடம், சிவிறி, சென்மரம்-புணை, திமில்,
துருத்தி, நீர்க்கோடு, நீர்வீசு கருவி, நீர்வீசு
கொம்பு, நெட்டித்தேர், நெய்ச்சிவிறி (புழுகு),
பள்ளியோடவையம், புனைந்த தெப்பம், மிதவை, மூங்கிற்புணை.
வட்டு. வெண்கிடை மிதவை, வெள்ளக்கால்.
பறவைகள்:-
கிரௌஞ்சம், கிளி, குயிலினம், குருகு, குருவி, கோகிலம்,
கோழி (கொடி), சக்கர வாளம், செவ்வாயு வணம், சேவல்
(கொடி), தாதுண் பறவை, தோகை, மகன்றில் (நீர்ப்பறவை),
மயில்.
பாண்டியன்:-
சக்கரவர்த்தி, தென்னவன், பஞ்சவன், மாறன், வழுதி.
பானவகை,
மதுவகை:- அடுநறா, அமிர்த பானம், காமக் களிப்பு,
காம பானம், சூடா நறவு, சூர் நறா, நறவு, பழத்தேனாற் செய்த
தேறல், மதுபானம்.
பூமாலைவகை:-
அதிரற் கண்ணி, இணைப்பிணையல், இலைக்கோதை,
இலைமாலை, ஒலியல், கண்ணி, தாமம், தார், தூக்கிக்
கட்டுமாலை, நெய்தல் மாலை, படலை மாலை, பிணைத்த
மாலை, புகை சுற்றிய தார், மாலையணிய விலைதருதல்.
போகப்பொருள்,
செய்தி முதலியன:- கத்தூரிக்குழம்பு, கபோலத்திலும்
நகத்திலும் செம்பஞ்சி எழுதுதல், கலவைக் குழம்பு,
கள்ளின் களிப்பை மறைத்தல், காதலர் தோளைப்
புணையாகக் கொள்ளுதல், காற்று மணத்தோடு திரிதல்,
குங்குமக் குழம்பு, குவளைத்தண்டால் கையை அணைதல், குவளையை
மகளிர் காதிற் செருகுதல், குளிர்வாடை, கேள்வன்உருட்டும்
துடிக்கிசைய ஆடல், சாந்தம்மி, சாந்தாற்றி, சுண்ணம்,
செம்பஞ்சுக் குழம்பைக் கன்னத்தில் எழுதுதல்,
தகரச்சாந்து, திலகம், பஞ்சவாசம், பனி ஆவி.
மரபுகள்
முதலியன:- எருது பெயர் சொல்லி அழைக்கப் படுதல்.
களிற்றில் ஆடவர் ஏறல். கன்னிப் பருவத்துத் தைநீராடல்,
குழலில் துகில்சுற்றி முறுக்குதல், செவித்தார், திசை
நோக்கித் தொழுதல், துடிக்கு இசைய மகளிர் ஆடல், தோள்வளையை
ஆழியாகக் கொண்டு சுழற்றல், தோற்றவர் வேறுவடிவம்
கொள்ளல்.
|