உரைகளில்
இவர் எடுத்துக்காட்டிய மேற்கோள்கள் அமைந்த நூல்களுள்
இதுகாறும் தெரிந்தவை வருமாறு:-
அகநானூறு,
இறையனாரகப் பொருள், நூலின் உரைமேற்கோள், கலித்தொகை,
குறுந்தொகை, சிலப்பதிகாரம், சிறுபாணாற்றுப்படை,
சீவகசிந்தாமணி, திரிகடுகம், திருக்குறள், திருச்சிற்றம்பலக்
கோவையார், திருவாய்மொழி, தொல்காப்பியம், நற்றிணை,
நாலடியார், நான்மணிக்கடிகை, நெடுநல்வாடை, பட்டினப்பாலை,
பரிபாடல், புறநானூறு, புறப்பொருள்வெண்பாமாலை,
பெருங்குறிஞ்சி (குறிஞ்சிப்பாட்டு), பொருநராற்றுப்படை,
மணிமேகலை, மதுரைக் காஞ்சி, முத்தொள்ளாயிரம்,
வளையாபதி.
"அன்பரு
ணாணொப் புரவுகண் ணோட்டம்,
நன்றறி வாய்மை நற்றவ முடையோன்,
இத்தகை யன்றி யீசன தருளால்,
உய்த்துணர் வுடையவோ ருண்மை யாளன்" - என ஆன்றோர்
புகழும் இவருடைய பலவகையான விசேடங்கள் விரிவஞ்சி
இம்மட்டில் நிறுத்தப் பெற்றன.
|