இனி, இப் பரிபாடலின்கண் "வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்"
என்றும், "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு
வாரா நெறி" என்றும் திருவள்ளுவனார் அருளிச்செய்ததற் கேற்ப,
இப் புலவர் பெருமக்கள் இறைவன் பால் இரந்து கேட்கும் வரங்களும்
பெருமைசான்றன. இறைவன் திருமுன்னர் நின்று இறைவனே நின்னை
யாங்கள் வழிபடுகின்றேம். ஆதலால், நீ எமக்கின்ன நலங்களைத்
தந்தருள், தருவாயேல் யாங்களும் கைம்மாறாக நினக்கு இன்ன
தரவல்லேம் என வரங்கேட்டல் பொதுமக்கள் இயல்பு.
அவ்வியல்பினையும் உலகியல் வழக்கத்தானே இப் புலவர்கள்
பரிபாடலிலே கூறியுள்ளனர். செவ்வேளின் திருப்பரங்குன்றத்தை
வழிபட்டு, மதுரை மகளிர் வரம் வேண்டுதலைக் கேண்மின்,

"கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஎப்ப நின் நளிபுனல் வையை
வருபுனல் அணிக!"

என்றும்,

"கரு வயிறு உறுக"

என்றும்,

"செய்பொருள் வாய்க்க"

என்றும்,

"ஐ அமர் அடுக"

என்றும், இங்ஙனமெல்லாம் யாம் வேண்டுவன விளைப்பாயெனின் யாங்களும்,

"வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும் கூறுமிசை முழவமும்
மணியும் கயிறும் மயிலும் குடாரியும்
பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி"

வந்து நினக்கு அளிப்பேம் எனக் கடம்படும் இப்பேதை மகளிரின் ஆரா
அன்பும், அதனினும் சிறந்த பேதைமையும் நமக்கு இவர்பால் இரக்கமே
காட்டத் தூண்டுகின்றன. இனி பிறிதோரிடத்தே வையையைத் தெய்வமாகவே
மதித்த ஒரு பேதை அவ்வையையை,

"நீ தக்காய்! நிறந் தெளிந்தாய்!"

என முகமன் மொழிந்து பின்னர்க் கேட்கும் வரம் நம்மைப் பெரிதும் வியக்கச்
செய்கின்றது. அஃதாவது:- "வையை