முகப்பு | தொடக்கம் |
அறவை நெஞ்சத்து ஆயர் |
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|