தொண்டர் புராணந் தொகுசித்தி யோராறும்
தண்டமிழின் மேலாந் தரம்."
(உமாபதி சிவாசாரியார்)
திருந்திய
தமிழில் தெய்வப் புலமை
அருந்திறல் வள்ளுவன் ஆய்ந்துதன் வாக்கால்
அறம்பொரு ளின்பம் வீடென நான்கின்
திறந்தெரிந் துரைத்த செவ்விமுப் பாலுக்கு
ஓருரை யின்றி யொன்பது சென்றும்
ஐயுற வாக நையுறு காலை
வள்ளுவன் மீளவும் வந்துதித் துலகோர்க்
குள்ளிய பொருளை யுரைத்தன னென்ன
எழுத்து முதல இலக்கண வகையும்
வழுத்துவே தாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பாத் தமிழ்மனு நூலிற்
கிதுவே யுரையென் றியாவரும் வியப்பப்
பொழிப்பக லத்தொடு நுட்ப வெச்சம்
விழுப்பொருள் தோன்ற விரித்தினி துரைத்தனன்
வடநூற் றுறையுந் தென்றிசைத் தமிழும்
விதிமுறை பயின்ற நெறியறி புலவன்
அன்பரு ணாணொப் புரவுகண் ணோட்டம்
நன்றறி வாய்மை நற்றவ முடையோன்
இத்தகை யன்றி ஈசன தருளால்
உய்த்துணர் வுடையவோ ருண்மை யாளன்
பரிமே லழகன் எனப்பெயர் படைத்துத்
தரைமே லுதித்த தலைமை யோனே.
(பெருந்தொகை,1543)
"திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர்தங்
கருத்தமைதி தானே கருதி - விரித்துரைத்தான்
பன்னு தமிழ்தேர் பரிமே லழகன்எனு
மன்னு முயர் நாமன் வந்து."
(பெருந்தொகை,1544)
"பாலெல்லா
நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
றெரித்த வுரையாமோ தெளி."
(பெருந்தொகை,1545)
"தெய்வப் புலமைத் திருவள்ளுவர் குறளில்
உய்விக்கு நூலெல்லா முள்ளதெனச் - செய்வித்தான்
தத்துவமெல் லாமுடம்பிற் றந்துணர்வார் போலுலக
மொத்த பரி மேலழகன் ஓர்ந்து."
(பெருந்தொகை,1546)
|