2. உரைவிளக்கம்  
 
	எ - டு : குறள், 235, 338 
 3.
 சொல்விளக்கம்  
 
	எ - டு : குறள். 127 
 4. கொளு
 விளக்கம்  
 
	எ - டு : குறள். 996, 1225 
 5. மூலச்சொல்லையே
 உரையில் ஆளாமை  
 
	எ - டு : குறள், 1113, 1328 
 இனி, இவ்வுரையைக்
 குறள்தொறும் பரிமேலழகருரையொடு ஒப்புநோக்கினும், பல விடத்துப் பல வகையில் திருத்தமும்
 வேறுபாடுங் கண்டு இப்புத்துரையின் தேவையை உணரலாம்.
 ஆயின், பரிமேலழகருரையால் ஒரு பெரு நன்மையும் இல்லையோவெனின், உண்டு; அது எதுவெனின் அவருரைத்
 தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கப்படாதிருந்ததேயென்க;
 எது போலவெனின், முதலிரு கழகத்தும் வழங்கிய இயற்றமிழிலக்கணம் முழுதும்,
 அதன் தொகுப்பாசிரியராகிய தொல்காப்பியரது
 தொல்காப்பியம் என்னும் பிண்டநூலான் போற்றப்பட்டு
 வந்திருப்பது போன்று என்க. 
 தாமரைச்
 செல்வன் தமிழநூ லுலகெங்கும் 
 காமரு கட்டடங் கண்குளிரப் -போமுறை 
 அச்சிட்ட சுப்பையா யாய்ந்தேயிம் மெய்ந்நூற்கும் 
 மெச்சுற்றுப் பார்த்தனன் மெய்ப்பு. 
 இவ்வுரை
 யச்சீட் டிறுதி தனிநின்று 
 செவ்வகை பார்த்த செயல்நோக்கின்-எவ்வண் 
 சுழன்றுந் தமிழுலகம் சுப்பையாப் பின்னாம் 
 உழந்தும் அவனே தலை. 
 சேர்ப்பு : இத்திருக்குறள் தமிழ் மரபுரைக்குப் பிழைதிருத்தப் பட்டியும் அருஞ்சொல் அகர முதலியும் தொகுத்த திரு. இராசிபுரம் சேயோனுக்கும், அதிகார அகரமுதலியும் குறள்
 முதற்குறிப்பகர முதலியும் தொகுத்த திரு. ஆரணிச்
 செல்வராசனார்க்கும் என் நன்றி உரித்தாம்.  
  
 |