ஏ-ஏம்=காப்பு,பாதுகாப்பு, இன்பம்.
ஏம்-ஏமா. ஏமாத்தல்=அரணாதல்
ஏம்+மரு=ஏமரு. ஏமருதல்=காக்கப்படுதல்.
ஏம்+ஆர்=ஏமார். ஏமார்த்தல்=வலுப்படுத்தல்.
ஏம்-ஏமை-யாமை=பாதுகாப்பான ஒடுள்ளது.
ஒ.நோ: ஏன்-யான்,ஏது-யாது.
யாமை-ஆமை,ஒ.நோ.யானை-ஆனை.
ஏம்-ஏமம்=பாதுகாப்பு,ஏமம்-யாமம்=
பாதுகாப்பான மறைவிற்கேற்ற நள்ளிரவு.
ஏமம்-சேமம். ஒ .நோ: ஏண்-சேண்.சேமம்-க்ஷேம (வ.).

கசடு: கசளுதல்=கலத்தல், கலங்குதல், கலவையாதல் மண்டியாதல். கசள்-கசண்டு=அடிமண்டி. கசண்டு-கசடு=மண்டி,கோது, குற்றம். கசடு-கசட்ட (வ.).

கணம்: கல்-கல, கல்-கள். கள்ளுதல் கலத்தல். கள்-களம் = கூட்டம், அவை.

கள-கண-கணம்=கூட்டம். கணத்தல்-கூடுதல்
கணம்-கண (வ.).

கந்து: கும்முதல்-திரளுதல், கும்-கம்-கந்து = திரண்டதூண். ஒ. நோ: உம்-உந்து. கந்து-ஸ்கந்த (வ.).

கருமம்: கருத்தல்-கை கருக்குமாறு வினை செய்தல். இதற்கு எதிர் செய்தல். செய்தல்-கைசிவக்குமாறுவினைசெய்தல். கடுவுழைப்பால்கருப்பர் கைகருப்பதும் சிவப்பர்கை சிவப்பதும் இயற்கை. கரு-கருமம்-கர்மன் (வ.). கரு-க்ரு(வ.). கருத்தல் என்னும் வினை இன்று வழக்கற்றது. கருமம் என்னும் சொல்லொடு தொடர்புடையதும், கரு என்னும் வினை முதனிலையைக் கொண்டதுமான கருவி என்னும் சொல், தூய தென் சொல்லாயிருத்தலை நோக்குக.

கரை: கரைதல=அழைத்தல், சொல்லுதல். விளம்புதல் கரை-க்ரு(வ.g),

கவரி-கவரம்=சினம். கவரம்-கவரி=சினம் மிக்க காட்டெருமை, எருமை.

''படிந்து சேடெறியுஞ் செங்கட் கவரியும்'' (கல்லாடம், 53: 30)