கவரி = நீண்ட மயிரடர்ந்த திபேத் தெருமை, கவரி மயிர்போல் அடர்ந்து வளரும் சம்பா நெற் பயிர்வகை, கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம். சவரி - சமரீ (வ,). சாமரம் - சாமர (வ.). கவுள்: கவ்வு கவுள் = குறடுபோற்கவ்வும் அலகுகன்னம் வடவர் காட்டும் கரப் - கப் (இரங்கு) கன்னம் என்னும் மூலம் இம்மியும் பொருந்தாது. கனம்: கல் - கன் - கன. கனத்தல் = கற்போற்
பளுவாதல் மிகுதியாதல், பருத்தல், தடித்தல், பெருமை யுறுதல். கன - கனம் = பளு, பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம், மும்மான வடிவு கனம் - கன (வ.gh), காண்: காணுதல் = பார்த்தல், அறிதல். காட்சி - பார்வை அறிவு.
ON kanna, Kunna, LL canna, OE canne, ME cun, con, E ean, ON kna, OE cna, OHG cna, E know, L gno, GK gno, skk gna
(ஜ்ஞா), காக்கை: காகா - காக்கா - காக்கை. காகா - காகம். காக்கை - காக்க (வ.). தமிழ் குமரிநாட்டில் மிக முந்தித் தோன்றிய இயன்மொழி. சமற்கிருதம், ஆரியம் பிராகிருதம் திரவிடம் தமிழ் ஆகிய நான்கினின்றும் பிந்தித்தோன்றிய திரிமொழி. காமம்:
கவர்தல் விரும்புதல். கவர் - கவ - கா - காதல். கா - காம் - காமம் - காமன் - காம (வ.). காரிகை: கரு - கார் = கருமை, கரிய முகில், மழை, நீர், அழகு. நீர்வளத்தினாலேயே கண்ணிற்கினிய காட்சியளிக்கும் மரஞ்செடி கொடிகள் தோன்றுவதால், நீரைக் குறிக்குஞ் சொற்கட்கு அழகுப் பொருள் தோன்றிற்று. ஒ.நோ: அம் = நீர், அழகு. கார் - காரிகை = அழகு, அணி, பெண். காரிகை - காரிகா (வ). வடவர் காட்டும் பொருந்தாப் பொருட்கரணியம் வருமாறு:- கரு செய். காரக (ஆ.பா.) = செய்பவன், காரிகா (பெ.பா.) செய்பவள், நடிப்பவள்.
|