தள்-தாள்=அடித்தண்டு. தள்-தண்டு=திரண்ட அடித்தண்டு, திரண்ட ஊன்றுகோல், தண்டு-தண்டம், தண்டு-தண்டி-தண்டித்தல்=பருத்தல். தண்டி-தடி, தண்டித்தல்=தடியாலடித்தல், தண்டனை செய்தல். தண்டி-தண்டம்,
தண்டனம், தண்டனை, தண்டம்=தண்டனை, தண்டம்=தண்ட (வ.).
தண்டனம் (தண்டனை)=தண்டன (வ.). தவம். 'தவம்' என்னும் அதிகார முகவுரையைக் காண்க. தவம் - தபஸ் (வ.). தா தானம்: தள்ளுதல்=வாழை, தெங்கு முதலிய குலை தள்ளுதல், பயன்தருதல், தருதல். தள் -(தர்)-தரு-தா. தா என்னும் சொல், ஒருவன் தனக்குச்
சமமானவனிடமே ஒன்றை வேண்டும்போது பயன்படுத்தற் குறியதாம். "தா என் கிளவி ஒப்போன் கூற்றே." (தொல். 929) இனி, இச்சொல் தன்மை முன்னிலை ஈரிடத்திற்கே யுரியதென்றும் இலக்கண வரம்புள்ளது. "தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த" (512) இதனால், தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை. தா:- தா (வ.).
L.do, Gk (di) domi. தா+அனம்=தானம். பொதுவாக, மதம்பற்றிக் கோவிற்கும் அடியார்க்கும் கொடுப்பது தானம் என்றும், கல்வி பற்றி புலவர்க்கும் பாணர் முதலியோர்க்குங் கொடுப்பது கொடை ஏன்றும், அறம் பற்றி எளியார்க்கும் இரப்போர்க்குங் கொடுப்பது ஈகையென்றும், சொல்லப்படும். தானம்
-தான (வ.). L. donem. தாமரை: தும்-துமர்-துவர்=சிவப்பு,
துவர்-துவரை=செம்பயறு. துமர்-தமர்(தமரை)-தாமரை= செந்நிற நீர்ப்பூவகை. இச்சொல் இன்று தன்
சிறப்புப் பொருளிழந்து, அவ்வகையின் இருநிற மலர்க்கும் பொதுப்பெயராக வழங்குகின்றது. தாமரை-தாமரஸ(வ.).
|