தெய்வம்:
முதற்காலத்தில் தீயே தெய்வமாக வணங்கப்பட்டது. அதனால் தெய்வத்தின் பெயர்களுட் பழைமையானவை தீயின் பெயர்களினின்றே தோன்றியுள்ளன. தேய்தல்=உரசுதல், மரங்கள் உரசித்தீப்பிடித்தல். தேய்-தே=நெருப்பு, தெய்வம். தேய்வு-தேவு=தெய்வம். தேவு-தேவன். தேய்வு-தெய்வு-தெய்வம் தேவன்-தேவி (பெ.பா.), தேவர் (பலர்பால்), "தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்" (தொல். 487) "பால்வரை தெய்வம் வினையே பூதம்" (தொல். 541) "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை" (தொல். 964) என இற்றை முது
பழந்தொன்னூலில் யகரமெய்யடி கொண்ட தெய்வப்
பெயரே குறுக்கப்பட்டிருத்தல் காண்க. தெய்வம்-தை(வ.)
தேவன்-தேவ(வ.). வடமொழியாளர் திவ்ய (தெய்வத்தன்மையுள்ள) த்யௌஸ் (ஒளியுள்ள வானம்) என்னும் திரிசொற்களினின்று திவ் (ஒளிர்) அல்லது த்யு என்னும்
செயற்கையடிகளைத் தோற்றுவித்து அவற்றை மூலமாகக் காட்டுவர். அறிஞர் நடுநிலையாய் ஆய்ந்து உண்மை காண்க. தே(ய்)வு-தெய்வம்.
L deus, GK theos. தேயம்:
திகைத்தல்=முடித்தல், திகை=முடிவு, எல்லை, திசை.
திகை-திசை-தேசம்=ஒரு திசையிலுள்ள நாடு. தேசம்-தேயம்=நாடு,
இடம், இடப்பொருளுருபு, தேயம்-தேம் =இடப்பொருளுருபு.
தேம்-தே-தேவகை= இடப்பொருளுருபு, திசை-திசா (வ.) திகை-திக் (வ.). வடமொழியில்
திசா என்னும் சொற்குத் 'திச்' என்பதை மூலமாகக்
காட்டுவர். திச்-காட்டு.
Gk deiknummi (to show). இந்தியில்
திக்கா என்னுஞ்சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு-தேக்கு (த.வி.)-திக்கா
(பி.வி.)-இதற்கு மூலமான சூரசேனிச்சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்கலாம். வடமொழியிலுள்ள
திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின், தென்சொல்லும் வடசொல்லும் வெவ்வேறு வழியில் தோன்றினவாகும்.
|