தோட்டி: துறடு-துறட்டி-தோட்டி தோட்டி-த்ரோட்டி, த்ரோத்ர, தோத்ர (வ.). தோணி: தொள்ளுதல்=தோண்டுதல், குடைதல். தொள்-தோள்-தோணி=குடையப்பட்ட மரக்கலம், அதுபோற்
பலகைகளாற் பொருந்திச் செய்த கலம். தோணி-த்ரோண (வ.). நயன்: நயம்-நயன் நன்மை, நேர்த்தி, நேர்மை,
நேர்பாடு வடவர் காட்டும் நீ என்னும் வேர் நீதி என்னும் வடசொற்குப்
பொருந்துமேயன்றி, நயன் என்னும் தென்சொற்குப் பொருந்தாது. நாகரிகம்: நகர்-நகரம்-நகரிகம்-நாகரிகம்=முதன் முதல் நகரத்துத்தோன்றிய திருந்தியவாழ்க்கை. நாகரிகம்-நாகரிக (வ.). நாடி:
நுள்-நள்-நாள்-நாளம்=உட்டுளையுள்ள மூங்கில். நாளம்-நாளி-நாழி-நாடி=அரத்த அல்லது மூச்சுக்குழாய் ஊதை (வாத) பித்துக் கோழை நாடி, நாடித் துடிப்பு. நாடி-நாடி(வ.). நாவாய்: நாவுதல்=கொழித்தல். நாவு-நாவாய் =கடல் நீரை கொழித்துச் செல்லும் பெருங்கலம். நாவாய்-நௌ, நாவ (வ.). L navis. நிச்சம்: நில்-நிற்றம்=நிலையானது. ஒ. நோ: கொல்-கொற்றம். வெல்-வெற்றம். நிற்றம்-நித்தம். ஒ. நோ: முற்றகம்-முத்தகம். நித்தம்-நிச்சம். ஒ. நோ: அத்தன்-அச்சன், நத்து-நச்சு. நித்தம்-நித்ய (வ.).
இதற்கு வடவர் காட்டும் மூலம் பொருந்தாப்
பொய்த்தல். நீர், நீர்மை: நீள் -நீர்=நீளும்பொருள். நீர்+நிலம். நில்-நிலம்= நிற்கும் பொருள். நீர்-நீர்மை: நீரின் தன்மை, குளிர்ந்த தன்மை, இனிய அல்லது சிறத்த தன்மை, தன்மை. நீர்-நிரம்-நீர(வ.). நீரம்-நார (வ.). பக்கம்: பகு-பக்கு-பக்கம்-பக்ஷ (வ.).
|