11. கோயிலிலும் மடத்திலும் அமைந்த கல்விக்கூடம். (பள்ளி, பள்ளிக்கூடம்)
பள்ளிக்கு வைத்தல் = படிக்க வைத்தல், பள்ளிப்பிள்ளை பள்ளிக் கணக்கு. 12. அரசன் அல்லது துறவி கல்லறை. 13. கோயில் அல்லது மடமுள்ள ஊர். 14. பள்ளமான வயலில் வேலை செய்யும்
வகுப்பான். இங்ஙனம் தொன்றுதொட்டு வழங்கிவரும் தூய தென்சொல்லை, பிற்காலத்திற் பள்ளி
சந்தம் என்றும் பள்ளிவாசல் வன்றும் பிறநாடுகளினின்று
வந்த பிறமதச்சார்பாக வழங்கியமைபற்றி, அயன்மொழிச்
சொல்லென்று ஆராய்ச்சியில்லார் அனைவரும் மயங்கு வாராயினர். பள்ளி - பல்லி (வ.). பளிங்கு: பள் - பள: பளபள என்பது ஒளிர்தல் (பிரகாசித்தல்) குறிப்பு. பளிச்சு,
பளீர் என்பன மின்னற் குறிப்புக்கள். பள் - பளி - பளிங்கு=பளிங்குக்கல். கண்ணாடி, கற்பூரம். பளி - பளிதம்=கற்பூரம். பள் - பட்டு=பளபளப்பான நூல் அல்லது துணி பட்டுப் பட்டென்று நிலா அடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. பளிங்கு=ஸ்படிக (வ.). பாகம்: பகு - பாகு - பாகம் - பாக (வ. bhaga). பாரி: பர - பார் - பாரி. பாரித்தல்=பரப்புதல், விரித்தல், பாரி - ஸ்பரி (வ. sphar). பித்தர்: பிதற்று - பேத்து - பித்து=பிதற்றுநிலை, அறிவுமயக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் நீர், அந்நீர்ப்பை, மயங்கிய கோட்டித்தனம், கோட்டி போன்ற பெருங்காதல், 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' பித்து - பித்தம்=மயக்க நீர், கோட்டித்தனம், பெருங்காதல் மதிகேடு. பித்தம் - பித்தன். பித்து - பிச்சு பித்தி (பெ. பா.) - பிச்சி. பித்தம் - பித்த (வ.). பீழி, பிழை- பிள்ளுதல்=பிடுங்குதல், துன்பஞ்செய்தல், தொல்லை கொடுத்தல். பிய்த்துப் பிடுங்குதல் என்னும் வழக்கை நோக்குக. பிள் - பீள் - பீழ் - பீழி - பீழித்தல்=வருத்துதல், துன்பஞ் செய்தல். பீழி - பீடி - பீட் (வ.). பீழி - பீழை - பீடை - பீடா (வ.). பீடித்தல் -
துன்பஞ் செய்தல். பீடை துன்பம். புருவம்: புரிதல்=வளைதல். புரி- புரிவு - புரிவம் -
புருவம்=கண்ணிற்கு மேலுள்ள வளைவு. புருவம் - ப்ரு (வ.), சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி வட
சொல்வடிவைப் ப்ருவ (bh) என்ற வடிவிலேயே குறிக்கின்றது.
OE bru, E brow.
|