பெறப்படுவதாயிற்று. ‘கொங்கரை யட்டகளத்து' என்றும், ‘வஞ்சிக்கோ வட்ட களத்து' என்றும் வருதலின், வெல்லப்பட்டோன் சேரனென்பது போதருவதாயிற்று. ‘காவிரி நாடன் கழுமலங்கொண்டநாள்' என்கையால் வென்று கொண்ட இடம் கழுமலம் என்பதாயிற்று.

புறநானூற்றிலே,

‘குழலி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலி யிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுரை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே'


(செய்யுள்-74)

என்னுஞ் செய்யுளின்கீழ் வரையப்பட்டுள்ள குறிப்பால், செங்கணானொடு பொருதான் சேரமான் கணைக்காலிரும்பொறை யென்பது தெரிகின்றது. அது, ‘சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பது ‘குழவி யிறப்பினும்' என்னும் இச் செய்யுள், தமிழ் நாவலர் சரிதையில்,

‘சேரன் கணைக்காலிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதிவிடுத்த பாட்டு' என்னும் தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. செய்யுளின் பின்னே, ‘இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட் டரசளித்தான்' என்று குறிக்கப் பெற்றுள்ளது. இங்ஙனம் இரு குறிப்பும் வேறுபடுவதன் காரணம் புலப்படவில்லை. இவ் விரண்டினுள்ளே புறநானூற்றுக் குறிப்பே வலியுடையதென்று கொள்ளின், அது, பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டு, துஞ்சினான் கணைக்காலிரும் பொறையாகச் சிறைவீடு செய் தரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும் சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இரண்டு பாட்டுகள் புறநானூற்றில் உள்ளன. நற்றிணையில் அவர் பாடிய பாட்டு ஒன்றும் அவனைக் குறிப்பிடுகின்றது. அவ் வேந்தன் கணைக்காலிரும் பொறையின்