அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
வட்டுஉடை - வட்ட ஆடை
(முழங்கால் அளவு உடுக்கும்
ஆடை) 3 - 122
வம்பக்கோட்டி - பயனில்
சொற்களைப் பேசும்
கூட்டம் 14 - 63
வம்பம் - புதுமை 3 - 126
வம்பலன்-அயலான் : புதியவன்
என்னலுமாம் 20 - 88
வயவர் - வீரர் : ஆண்மை
யுடையவர் 19 - 122
வயா - வேட்கை 20 - 93
வயிரம் - வைரமணி 27 - 135
வயிறுகாய்-பெரும்பசி 11 - 110
வயின் - இடம் 3 - 97
வரி-மையெழுதிய கீற்று 3 - 8
வரிச்செப்பு-அழகியசெப்பு;
சிமிழ் 4 - 65
வர்த்தித்தல் - உண்டாதல் 29 - 256
வலம்புரிச்சங்கம்-வலம்புரி
யாகிய சங்குகள் : (வலப்
புறம் முறுக்குண்டு இருப்பது
என்பது பொருள்) 7-113
வலித்து - எண்ணி 21-124
வல்லாங்கு-வல்லமை 23 - 44
வல்லி - பூங்கொடி 18 - 25
வல்லிருள்-மயக்கம் 14 - 3
வழங்குநீர் - கடல்: (போவதும்
வருவதுமாகிய
அலைகளை யுடைய நீர்
என்பது பொருள்) 14 - 84
வழி - மரபு; குலம் 22 - 210
வழுநீர் வழுவாகிய நீர்:வழு
வழுத்தலையுடைய நீர் 20 - 47
வழுவுதல் - தப்புதல் 11 - 130
வளம் - வருவாய் 22 - 45
வளி - காற்று 24 - 86
வளை - வளையல் 18 - 39
வளையோர்-வளையலணிந்த
பெண்கள் 19 - 24
வளையோன்-வளையலணிந்தவள் 26 - 68
வள்ளை - வள்ளையென்னும்
ஒருவகைக்கொடி 20 - 53
வறங்கூர்தல் - வளங்குறைதல் 7 - 9
வறந்தலை - வறுமையுள்ள
இடம் 10 - 9
வறம் - வற்கடம் ; வறிய
நிலையை உலகிற்குத் தருவது ;
பஞ்சம் 14 - 13
வறன் - வற்கடம் ; பஞ்ச
காலம் 21 - 157
வற்பம்-வன்மை : திண்மை 27 - 120
வனப்பு - அழகு 22- 128
வாகை - வெற்றி 24 - 55
வாக்கு - வாய் 27 - 237
வாசவர் - பஞ்சவாசம் விற்
போர் 28 - 33
வாயில் ஐம்பொறிகளும்,
உள்ளமும் 24 - 106
வாயில் - வீட்டின் முன்இடம் 20-96
வாயில் - வாயில் காப்பவன் ;
காவற்காரன் 19-117
வாய் - உண்மை 21 - 114
வாய்வது-வாய்ப்புடைத்து 21 - 171
வாய்வாளாமை-வாய்பேசா
திருத்தல் 30 - 237
வாரணம் - யானை ; கோழி 7 - 115 - 6
வாரணாசி-காசித் திருப்பதி 13 - 3
வார்சிலை-பெரிய வில் 19 - 53
வால் - வெண்மை 19 - 76
வால்வெண்-சுண்ணம் 4 - 18
வாளால் எறிதல் - வாள்
கொண்டு வெட்டுதல் 22-158
வாளில் தப்புதல்-வாளால்
வெட்டுதல் 21 - 60
வாள் - ஒளி 3 - 117
வாள் திறல்-வாளின் வலிமை 18 - 97
வானவாழ்க்கையர் - விசும்
பில் இருப்பவர்: தேவர்
20 - 36
வான்கோடு-சிறந்த யாழ்த்
தண்டு 4 - 56
வான் தரு கற்பு - மழை வேண்
டிற் பெய்விக்கும் சிறந்த
கற்புநெறி 15 - 77
விசி - கட்டுதல் 22 - 63