இது எனக்கு யானைத்தீ என்னும் தீராத பசியைத் தீர்த்தது. பசியால் மெலிந்தவர்கட்கு
உயிர்மருந்தாகவுள்ளது,' என்று கூறினாள்.
பின். அரசன் "யான் செய்யவேண்டுவது யாது?" என்று கேட்ப, அவள் "சிறைக்கோட்டத்தை அழித்து அறவோர் வாழும் கோட்டமாகச் செய்தல்வேண்டும்," என்றாள். அரசன்
அவள் விரும்பிய வண்ணமே செய்வித்தான்.
அரசன் கட்டளையால் சிறைச்சாலை பல்வகை அறங்களும் நிகழ்ந்தற்கரிய சாலையாய்
விளங்கிற்று. உதயகுமரன் இந்நிழச்சிகளைக் கேட்டு மணிமேகலை உலகவறவியிலிருந்து
வெளிவந்தவுடன் அவளைக் கைக் கொண்டு தேரிலேற்றி அவள் கற்ற வித்தைகளையும்
அவள் கூறும் முதுமொழிகளையும் கேட்பேன்," என்று எண்ணிக்கொண்டு சென்று, அவளிருக்கும்
உலகவறவியில் ஏறினன்.
அப்போது காஞ்சனன் என்னும் விஞ்சையன், "காயசண்டிகைக்கு விருச்சிகமுனிவன்
இட்ட சாபத்தால் அவள் நூகர்தற்குரிய பன்னீராண்டும் சென்றன; அவள் இன்னும்
திரும்பி வாராமைக்குக் காரணம் யாதோ?" என்று மிக்க கவலையெய்தித், தன்
பதியை நீங்கி, விசும்பின் வழியாகவந்து காவிரிப்பூம்பட்டினத்தில் இறங்கிப்,
பூதசதுக்கம்முதலிய இடங்கள்தோறும் சென்று சென்று தேடித்திரிந்து, காயசண்டிகை
வேடம்பூண்டு உணவூட்டிக்கொண்டிருக்கும் மணிமேகலைபால் வந்து, அவளைக் காயசண்டிகையென்றே
துணிந்து, அருகிற்சென்று அவளை நோக்கி, "நின் கையில் ஏந்திய பாத்திரம்
ஒன்றேயாயினும், உண்போர் பலராவர். உன்னை வருந்திய யானைத்தீயாகிய நோயை,
ஒழித்தற்குத் தேவர்கள் இதனை அளித்தார்களோ?" என்று கூறி, பின்பு, பழைய
நட்பைப் புலப்படுத்தும் மொழிகள் பலவற்றைச் சொல்லிப் பாராட்ட, அவள்
அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது அவனைவிட்டு உதயகுமரன்பாற்சென்று அவனருகே
நீன்று இளமையின் நிலையில்லாமையை அவனுக்கு அறிவுறுத்த எண்ணி, அங்கே இயல்பாக
வந்த நரைமூதாட்டி ஒருத்தியைக் காட்டி, முன்பு அழகு மிக்கனவாக இருந்த அவளுடைய
ஒவ்வோர் உறுப்புக்களும் இயற்கைமாறி அழகுகெட்டு வெறுக்கத்தக்கனவாக இருத்தலை
நன்கு புலப்படுத்திக் கூறிக் காட்டிடனாள்.
அவள் அவ்வாறு கூறுதலைக்கேட்ட காஞ்சனன், "யான் அவளைப் பாராட்டிக் கூறும்
சொற்களை இவள் கொள்கின்றிலள்; என்னைப் பிறன் போல் நோக்குகின்றாள்"
அயலான்பின் செல்கின்றாள்" அயல் மகனுக்குக் காதற்குறிப்புடன் நீதியுரைக்கின்றாள்.
இவன்மேற்கொண்ட காலதலால், இவள் இங்கேயே தங்கிவிட்டாள் போலும்!" என
எண்ணி வெகுண்டு, அவ் வுலகவறவியினுள்ளே புகுந்து அற்றம் பார்த்து ஒளித்திருந்தனன்.
அதை அறியாத உதயகுமரன், "மணிமேகலைதான் காயசண்டிகை வேடம்பூண்டு கையிலே
பிச்சைப்பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, வந்து நின்று நம்மை மயக்கினாள்.
அறிந்தவன்போல் பழமை பாராட்டிய அயலான் ஒருவன் இங்கிருத்தலால், இவள்
இன்றிரவு இவ்விடத்தைவிட்டு நீங்குவாளல்லள்; இவள் செய்தியை இன்றிரவு நடுயாமத்தே
வந்து தேர்ந்துகொள்வோம்," என்று தன்னுள் எண்ணிக் கொண்டே சென்று தன்
இருப்பிடத்தை அடைந்தான். மணிமேகலையும் காயசண்டிகை வடுவத்தோடு சம்பாபதிகோயிலை
அடைந்து அங்கிருந்தாள்.
இரவில் யாவரும் உறங்கியபின் உதயகுமரன் முன்தான் எண்ணியவாறு செல்லத்துணிந்து,
தனியேயெழுந்து இருப்பிடத்தைவிட்டு நீங்கி
|