ஆராய்ச்சி முன்னுரை

யென்பவள், தன் இளம்பருவத்திலேயே தவஞ்செய்யத் துணிந்து, இல்லந்தோறுஞ் சென்று ஐயமேற்று ஊரம்பலம் அடைந்தாள்; அவள் அங்ஙனமாகவும் உதயகுமரன் அவளை விழைந்து அவள்பாற் காமம் காழ்கொள அவளை நிழல்போல் விடாமல் தொடர்ந்து சென்று நள்ளிருளில் அவ் வம்பலத்தை அடைந்தான். அது தெரிந்த மணிமேகலை தனக்குத் துன்பஞ் செய்யாதிருக்க எண்ணிக் காயசண்டிகை வடிவம் பூண்டிருந்தனள். காயசண்டிகையை அழைத்துச்செல்லுதற்கு வந்து அங்குமுன்னமிருந்த அவள் கணவனாகிய காஞ்சனன் என்னும் விஞ்சையன் கண்டு அவள் மணிமேகலை யென்பதை அறியாமல் அவள்த் தன்மனைவியாகிய காயசண்டிகை என்றும், அங்கு வந்த உதயகுமரனைத் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றும், தானே முடிவுசெய்துகொண்டு முறுகிய சினத்துடன் அவனை வாளால் எறிந்து வீழ்த்தினன்," என்று கூறினர்.

அதுகேட்ட மன்னன தன் மகன் இறந்ததற்கு வருந்தானாய், சோழிக ஏனாதியை நோக்கி, "உதயகுமரனுக்கு யான் செய்யவேண்டிய தண்டனையைக் காஞ்சனன் தான் செய்ததனால் தகுதிற்றவனானான்: மகனைப் புவியிற் கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர் மன்னன் வழியிலே இத்தீவினையாளன் பிறந்தான் என்னுஞ் சொல், மற்றைய அரசர் செவியில் படுதற்கு முன்னர், அவனைப் புறங்காட்டிற் போக்கி, கணிகைமகளாகிய மணிமேகலையையும் சிறைப் படுத்துக," என்றான். சோழிக வேனாதி அவ்வாறே செய்தான்.

பின்பு மன்னவன் அருளால் வாசந்தவை என்னும் முதியவள்மகன், இறந்த துயரால் வருந்தும் இராசமாதேவிபால் வந்தடைந்து, அவள் வருத்தம் நீங்கும்படி பல நல்லுரைகள் கூறி ஒருவாறு ஆற்றுவித்துச் சென்றாள். அவள்சென்றபின் இராசமாதேவி தன் வருத்தத்தைவெளிக்குக் காட்டாமல், அடக்கிக்கொண்டு, மணிமேகலையை வஞ்சித்துவருத்துவேன்,' என்றெண்ணி அரசனைச் சார்ந்து, ‘செங்கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தைக் கண்டும், அறிவு திரிந்த உதயகுமரன் அரசமுறைக்கு ஏற்றவனல்லன்; இறந்தது தக்கதே; தனது இளமை பயனற்றதாகச் செய்த மணிமேகலைக்குச் சிறை தகுதியானதன்று;' என்றாள். 'உன் கருத்து அஃதாயின் அவளைச் சிறையினின்றும் விடுவி,' என்றனன். அரசமாதேவி மணிமேகலையைச் சிறையினின்றும் விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவளைத் துன்புறத்த எண்ணி மயக்க மருந்தூட்டியும், தீங்கியற்றுமாறு கல்லா இளைஞனொருவனை ஏவியும், பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைவித்தும் அவள் ஒன்றாலும் துன்பமின்றி இருந்தமை கண்டு வியப்புற்று, நடுங்கி மணிமேகலையை நோக்கி. ‘மகனை இழந்த துன்பம் பொறுக்கலாற்றாது இத் தீங்குகளைச் செய்தேன்; இவற்றை நீ பொறுத்தருள வேண்டும்,' எனப் பலவாறு வேண்டினாள்.

அதற்கு மணிமேகலை, "இப்பொழிது நீ நின்மகனுடைய உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனையேல் அதனையெடுத்துப் புறங்காட்டில் இட்டவர் யாவர்? உயிர்க் கழுதனையேல் வினையின்வழி அது சென்று புகும் உடம்பினை உணர்தல் அரிது. அவ்வுயிர்க்கு நீ அன்பினையாயின், எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்; அவன் இறப்பு ஊழ்வினையால் நிகழ்ந்த," தெனக் கூறிப் பின்னும், "நீ மருந்தால் எனக்குப் பித்தேற்றினை; யான் மறுபிறப்புணர்ந்தேனாதலின், சிறிதும் அறிவு மாறாதிருந்தேன்; உன் ஏவலால் கல்லாக் கயவன் என்பால் வந்தபோது வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரவன்மையால் ஆண்