கேட்ட பின்பு. இவற்றையும் இவற்றின் பகுதிகளையும் உனக்கு விளங்க உணர்த்துவேன்,'
என்று கூறிவிட்டுத் தம்மிடம் செல்லுதற்கு எழுதலும், மணிமேகலை எழுந்து அவரை
வணங்கி, பின்பு இராசமாதேவி முதலியோரை நோக்கி, "நீவிர் மாதவர் நன்மொழிகளை
மறவாது அவர் கூறியவாறு ஒழுகுமின்; யான் இந் நகரிலேயே இருப்பேனாயின், 'உதயகுமரனுக்கு
இவளே கூற்றாயிருந்தன,' ளென்றுயாவருங் கூறுவர். ஆதலால் நான் இங்கிருக்கேன்.
இனி, ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவஞ் சார்ந்து, புத்தபீடிகையை வணங்கிவிட்டு
அப்பால் வஞ்சிநகர் சென்று பத்தினிக்கடவுளை வணங்கியபின் யாங்கணுஞ் சென்று,
நல்லறஞ் செய்துகொண்டிருப்பேன்; எனக்கு 'இடர்நேருமோ,' என்று நீர்வருந்தன்மின்,'
என்றுகூறி, அவர்களை வணங்கிப், பொழுதுபோன அந்திப்பொழுதிலே சென்று, உலகவறவியையும்,
சம்பாபதியையும், கந்திற்பாவையையும் வலங்கொண்டு வணங்கி, வான்வழியே பறந்து
நாகபுரஞ் சென்று ஆங்குள்ள புண்ணியராசனைக் கண்டு, அவன் பழம் பிறப்பை 'நீயே
ஆபுத்திரன்,' என்று உணர்த்தி, உன் கையிலிருந்த பாத்திரமே இதுஎன்றுதன்
கையிலிருந்த அமுதசுரபியைக் காண்பித்து மணிபல்லவஞ் சென்று புத்தபீடிகையைத்
தரிசித்தாலன்றி, உனது பிறப்பின் இயல்பை அறியாய்; ஆதலால், நீ அங்கே
வருவாயாக,' என்று கூறிவிட்டு வானிலே எழுந்து பறந்து சென்று, பொழுதுபோவதற்கு
முன் மணிபல்லவத்தில் வந்திறங்கிப் புத்தபீடிகையைத் தரிசித்தாள்.
அப்பால் மணிமேகலை வான்வழியாக எழுந்து வஞ்சிமாநகர் வந்து அங்கே கண்ணகியார்க்கும்
கோவலற்கும் எடுக்கப்பட்டுள்ள கோயிலையடைந்து அவர் படிமங்ளை வணங்கிப்
பரவினாள். பின் கண்ணகியாரை அவர்தம் கடன் முடித்த திறத்தைக் கூறுமாறு வேண்ட,
கண்ணகியார் தம் வரலாறு முழுதும் கூறிவிட்டு, 'நீ இளையள் என்றும் பெண்ணென்றும்
கருதிச் சமயக்கணக்கர் பலரும் நின்னோடு உரையாடாராதலால், நீ வேற்றுருக்கொள்க.'
என்றும் உரைத்தார். மணிமேகலையும் அவ்வாறே தனக்கு மணிமேகலா தெய்வம் தந்த
மந்திரத்தை ஓதி வேற்றுருக்கொண்டு முனிவரும் கற்றோரும் புலவரும் கூடியிருக்கும்
வஞ்சிநகர்ப் புறச்சேரியை அடைந்து, தனக்கு அறங்கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சியும்,
நால்வகை வாய்மை மேற்கோடற்குரிய பொருத்தமும் எய்தியமையால் அங்கே தங்கலுற்றாள்.
மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமயக்கணக்கர்களைக் கண்டு
அவரவர் சமயப்பொருட்களைக் கேட்க விழைந்து, அவரிடஞ் சென்று, அளவைவாதி
முதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரையும் கேட்க அவர்கள் தம்தம் சமயக் கருத்துக்களை
உரைத்தார்கள்.
அவைகளைக் கேட்ட மணிமேகலை, பின் வஞ்சிநகர்க்குட் சென்று தன் தாயாகிய
மாதவி சுதமதி அறவணவடிகள் ஆகியவரைப் பார்க்க விழைந்தாள். உடனே அந் நகரின்
உள்சென்று பௌத்த ஞானிகள் உறையும் தவப்பள்ளி யடைந்து அங்கே, தவம் மேற்கொண்டிருந்த
மாசாத்துவானைக் கண்டுஅவன் திருவடியைவணங்கித் தன் வரலாற்றை முறையே கூறினாள்.
அவனும் தான் கோவலன் இறந்தமையால் புத்த தருமம் மேற்கொண்டதாகத் தெரிவித்துக்கோவலனுக்கு
ஒன்பதுதலை முறைக்கு முன்பிருந்த கோவலனென்பான் கட்டியபுத்தசயித்தியத்தை
கண்டு இவண் வழிபட வந்தேன். வந்தபோது இங்குள்ள முனிவர்கள் 'காவிரிப்பூம்பட்டினம் கடல்கோட்படும்,' என்று அருளினர். அதனால் யான் இங்கேயே தங்கினேன்; இனி,
அறவணவடிகள் நினக்கு அறங்கூறுதற்
|