கேற்ற இடம், கச்சிமாநகரென்றெண்ணி, அங்கே மாதவியும் சுதமதியும் உடன்வரச்
சென்றுள்ளனர். மேலும் அக்கச்சிமாநகரும் வறுமையால் வருந்துகின்றது; உயிர்கள்
பல உணவின்றி இறக்கின்றன; அங்கே நீ சென்று அவற்றைப் பாதுகாப்பது பேரறம்,"
என்று கூறினான்.
மணிமேகலை அதுகேட்டு வஞ்சிமாநகரின் மேற்குத்திசைப் புறமாக வான்வழிச் சென்று,
வடகிழக்காகக் கச்சிமாநகரடைந்து, அது வறங்கூர்ந்திருப்பது கண்டு மனமிரங்கிப்
பின் அங்கே இளங்கிள்ளி யென்பான் அமைத்திருந்த புத்தசயித்தியத்தைக்
கண்டு வணங்கி அதற்குத் தென்மேற்கிலுள்ள ஒரு பொழிலையடைந்தாள். அவள் வரவறிந்த
கஞ்சுகன் சென்று காஞ்சி வேந்தற் கறிவிப்ப, அவன் அரசியற் சுற்றம் தன்னுடன்
சூழ்வரவந்து மணிமேகலையைக் கண்டு அவள் அறச் செயலைப் பாராட்டி வரவேற்று,
தனக்குத் தெய்வமொன்று தேர்னறி மணிமேகலையைப் பற்றி அறிவித்ததைக் கூறி
அது மணிபல்லவத்திலுள்ள கோமுகிப் பொய்கை பொழில் முதலியன போலத் தன்னை
இங்கே சமைக்குமாறு பணித்தமையும் அவ்வாறே தான் செய்தமையும் தெரிவித்து,
அவ்விடத்தையும் அவட்குக் காண்பித்தான்.
மணிமேகலையும், அதைக்கண்டு வழிபட்டுக் "காணார் கேளார் கால்முடமானோர்,
பேணா மாக்கள் பேசார் பிணியுற்றோர், படிவ நோன்பியர் பசிநோயுற்றோர்"
முதலிய பல்லோரையும் வருவித்துத் தன் அமுதசுரபியால் இனிய அமுதுண்பித்தாள்.
அக்காலை அறவண வடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையின் அறச்சாலையை
அடைந்தனர். அவர்களைக் கண்டதும் மணிமேகலை அவரவர்க்குரிய வழிபாடியற்றி,
அறுசுவை நால்வகை உணவுகொடுத்துத் தன் ஆண்வேடத்தை மாற்றிக் கொண்டாள்.
பின் மணமேகலை காஞ்சிமாநகர்க்கண் மாதவி சுதமதி ஆகிய இருவரையும் கண்டு
மகிழ்ந்து, அறவணவடிகளை வணங்கி, 'அறமுரைத் தருள்க,' வென வேண்டினள். அவள்
வேண்டியவாறே, ஆதிசினேந்திரன் அருளிய அளவைகளான பிரத்தியக்கம், அனுமானம்
முதலியவற்றை எடுத்துக்கூறி, 'இவற்றுள், மெய்ப் பொருளை ஐயமின்றி அறிந்துகொள்க,'
என அறவணன் உரைத்தான்.
மணிமேகலையும் அவர்காட்டிய ஞானவிளக்கின் துணைகொண்டு தவத்திறம்பூண்டு
தருமங்கேட்டுப் 'பவத்திறம் அறுப்பே,'னென நோற்கலானாள்.
இதுகாறும் கூறிய கதைச்சுருக்கத்தைக் காணின், மணிமேகலை மலர்வனம் புகுந்து
மணிமேகலா தெய்வத்தின் அருளால் மணிபல்லவஞ் சென்று பழம்பிறப்புணர்ந்து,
அமுதசுரபியும் மந்திரமும் பெற்று, காவிரிப்பூம்பட்டினம் வந்து பசிப்பிணியால்
வருந்தியோர்க்கு உணவளித்தலும், அவளைக் காதலித்த அரசிளம் புதல்வன் உதயகுமரன்
காஞ்சனனால் வெட்டுண்டிறத்தலும், அதனால் சிறைப்படுதலும், சிறையினின்றும்
விடுபடலும், ஆபுத்திரன்நாடு சென்று அவனை மணிபல்லவத்துக்குக் கொணர்ந்து அவனது
பழம் பிறப்பை அறிவித்தலும், அவனினின்று நீங்கி வஞ்சிமாநகர் சென்று சமயக்
கணக்கர்தம் திறங்கேட்டலும், பின் காஞ்சிமா நகர்க்குப் போந்து அறவண
அடிகளால் புத்தரோதிய அறங்கேட்டுத் தெளித்து தன் "பவத்திறம் அறுப்பேன்,"
|