ஆராய்ச்சி முன்னுரை

எனத் தவத்திம் கொண்டு நோற்றிருத்தலும் இக் காவியத்தின் முடிந்த நிகழ்ச்சிகளாக உள்ளன.

இக் காப்பியத்தில் கிளைக்கதைகளாக ஆதிரை, மருதி, விசாசை முதலிய பத்தினிப் பெண்களின் வரலாற்றுண்மைகளும், இடையிடையே அறவுரைகளும் இயற்கை வருணனைப் பகுதிகளும் தோன்றி ஓர் பொழில் சென்று நறுமலர் ஒன்றைக் கண்டறிந்து நுகர்ந்தாரொருவர்க்கு, அப் பொழிவிற் பற்பல நறுமண மிக்க மலர்களின் மணம் விரவி அவரை இன்படையச் செய்வதுபோல, இக் காப்பியத்தைப் பயில்வார்க்கும் இம் மணிமேகலைக் காதை வாயிலாகப் பற்பல காதைகளும் பொதுளியிருத்தலால் கற்பார்க்கு "எல்லாப் பொருளும் இதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை," யென்னுமாறு எல்லா நயமுங் காட்டிக் கற்போர் எக்கழுத்தம் கொண்டு இறும் பூதடையுமாறு இன்பளிப்பதாகும். இனி, நூலின் உட்பகுதிகளான இயற்கை வருணனை முதலிய பகுதிகளை ஆய்ந்து காண்பாம்.

இயற்கை வருணனை:

மணிமேகலை சுதமதியோடு உவவனத்திற்கு மலர்கொய்யச் செல்கின்றாள்; செல்லுங்கால் வீதியிற் கண்டு சென்ற இயற்கைக் காட்சிகளைக் கண்ட கண்டவாறு ஆசிரியர் காட்டுந் திறம் அறிந்து அறிந்து இன்புறற் பாலது!

அவை ஆங்கே கட்குடித்துக் களித்து வெறிகொண்டு உலாவி வரும் களி மகன் ஒருவன் காட்சியை.

"வந்தீர் அடிகள்நும் மலரடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்முறை கேண்மோ
அழுக்குடை யாக்கையிற் புகுந்து நும்முயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும்
தன்வயின் தரூஉமெம் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின்
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று
உண்மென இரக்குமோர் களிமகன்" (3:12-103)

ஓர் சமணத் துறவியைப் பார்த்து "அடிகாள்! நும் மலரடிளை வணங்கினேன்; நான் கூறுவதொன்றைக் கேட்க வேண்டும்; அழுக்கு மிக்க உடம்பிற் புகுந்திருக்கின்ற உம்முடைய உயிர், புழுக்க மிக்க அறையொன்றில் அடைத்து வைத்துள்ளவர்களைப்போல் வருத்தமுறாமல், எம் தலைவருரைத்ததாகிய இம்மை யின்பத்தையும் மறுமையின் பத்தையும் முடிவில்லாத முத்தியின் பத்தையும் தன்னிடத்திருந்து தருகின்றதான கொழுவிய மடலையுடைய தென்னங்கள்ளினால் கொலையென்பதும் உண்டோ? உண்மைத் தவமுடைய அடிகளே! இதனை உண்டு தெளிவுபெற்று இத் தவநெறியில் இதனினும் மிக்க பயனைக் கண்டால் தேறலையன்றி எம்மையும் நீக்கிவிடும் என்று கூறி உண்ணா விரதமுடையராகிய சைனமுனிவருடன் சபதங்கூறிக் கள்ளை உண்ணுமாறு வேண்டுகின்ற ஓர் களிமகன்," என்று கட்குடியனுடைய இயற்கைத்