ஆராய்ச்சி முன்னுரை

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஓழிக ...........................     (7:7 - 14)

எனவும், பின்னரும்

"ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே."   (11:92-6)

எனவும்,

"இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது." (22:135 - 8)

எனவும், இராசமாதேவிக்கு மணிமேகலை அறிவு புகட்டுவதாக அமைத்து,

"உடதற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே
உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது
அவ்வுயிர்க் கன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும்.''   (23:73-79)

எனவும், பிறண்டும் ஆங்காங்கே வரும் காதைகளில், மக்களுக்கு வேண்டும் அறப்பண்புகள் அமையக் காட்டப்பெற்றுள்ளன,.

உவமை நயங்கள்

இந்நூலின்கண் அவ்வவ்விடங்கட்கேற்பப் பொருத்தமான உவமைகள் எடுத்து விளக்கப்பெற்றுள்ளன. தொல்காப்பியனார் வகுத்துக் காட்டிய வினை, பயன். மெய். உரு என்ற நால்வகை உவமை நயங்களும், உருவகவணி முதவிய ஏனைய உவமங்களும் கதைப்போக்குகளினிடையே வந்து கலந்து கற்பவர் நெஞ்சம் கனிவு பெறுமாறு பொருந்திக் கிடப்பதைக் காணலாம்.

"மாமலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின்"    (3: 3 - 4)

எனவும்,

"தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றி."  (3: 12 - 13)

எனவும்,

"இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
விரைமலர்த் தாமரைக் கரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக் கொடுமடல் அவிழ்ந்த
வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண்.''      (4: 13 - 8)

எனவும்,