9--14. செங்கதிர்ச்
செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட - சிவந்த
கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறுதித்த
காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக்கொள்ள, அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - தேவ இருடியாகிய
அகத்திய முனிவன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய
பாவை, செங்குணக்கு ஒழுகி - நேர்கிழக்கே ஓடி, அச்சம்பாபதி அயல் - அந்தச்
சம்பாபதியின் மருங்கு, பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித்தோன்ற-விளங்குகின்ற
கடலொடு கலந்து தோன்ற ;
திருக்குலம் - சூரிய குலம். விளக்கும் காந்தமன் என்க.
காந்தமன்-காந்தனாகிய மன்னன் ; காந்தன் - சோழருள் ஒருவன் ;
1"காந்த
மன்னவன்" என்பர் பின்னும். கஞ்சம் - நீர். வேட்கையினையுடைய மன் என்றுமாம்.
கரகம் - குண்டிகை ;
2"நீரற
வறியாக் கரகத்து" என்பது காண்க. கவிழ்த்த வென்னும் பெயரெச்சம் காரியப்
பெயர் கொண்டது ; காவிரி முன்னரே யுள்ளதாயின் இடப்பெயர் கொண்டதாம்.
செங் குணக்கு : செம்மை - நேர்மை. நீர்ப் பரப்பு - விரிநீர்: கடல்.
15--21. ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் - ஆண்டு இனிது அமர்ந்திருந்த
அரிய தவமுதியோளாகிய சம்பாபதி, ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு-பெருகுகின்ற
காவிரிப் பாவையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, ஆணு விசும்பின் ஆகாய கங்கை-வானினை
இடமாகக் கொண்ட அன்பினையுடைய ஆகாய கங்கையே, வேணவாத் தீர்த்த விளக்கே
வா என - வேட்கையானாகிய அவாவினைத் தீர்த்த விளக்கே வருக என அழைப்ப,
பின் நிலை முனியாப் பெருந்தவன் கேட்டு - பின் நிற்றலை வெறுத்தலில்லாத
அகத்திய மாமுனிவன் அதனைக் கேட்டு, அன்னை கேள்-அன்னாய் கேட்பாயாக, இவ்
அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தகைமையள் - இவ்வரிய தவமூதாட்டி நின்னால்
வணங்கப்படும் தகுதியுடையவள், வணங்கு என - ஆகலின் இவளை நீ வணங்குவாய் என்று
காவிரியை நோக்கிக் கூற ;
பின்னிற்றல் - தாழ்ந்து நிற்றல்;
3"பிற்றை
நிலை முனியாது" என்பதிற் போல. கொண்டாங்கு, கேட்டீங்கு என்பவற்றில் ஆங்கு,
ஈங்கு என்பன அசைகள். ஆணு - அன்பு:
4"ஆணுப்
பைங்கிளி" என்பதன் உரை காண்க. விசும்பின் என முன் வந்தமையின், ஆகாய
கங்கை என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. கங்கை வானினின்று வந்ததென்ப
ஆகலானும், காவிரி நீர் கங்கை நீர் ஆகலானும் 'ஆகாய கங்கை'
1
மணி. 22 : 27. 2 புறம்.
கடவுள் வாழ்ந்து. 3 புறம்.
183. 4 சீவக. 1002.
|