என்றார். "பரப்புநீர்க் காவிரிப்
பாவைதன் புதல்வர்" என்புழி, 1"காவிரி
நீர் கங்கை நீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வர் என்றார்"
என அடியார்க்கு நல்லார் கூறியதும், தொல்காப்பியப் பாயிர
வுரையில் 2"கங்கையாருழைச்
சென்று காவிரியாரை வாங்கி" என நச்சினார்க்கினியர் கூறியதும்
ஈண்டு அறியற்பாலன.
22--32. பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய-பாடுதற்கமைந்த
சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ச்சி மிக்க, கோடாச் செங்கோல்
சோழர்தம் குலக்கொடி - வளையாத செங்கோலினையுடைய சோழர்களின் குலமகளாகிய,
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்-கோட்களின் நிலை மாறுபட்டு மழை பெய்யாது
கழியுங்காலம் நீட்டிப்பினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை -
தான் நிலைதிரியாது எஞ்ஞான்றும் வளங் கொடுக்கும் தண்ணளியுடைய தமிழ்ப்
பாவையாங் காவிரி, தொழுதனள் நிற்ப-வணங்கி நிற்க, அத் தொன் மூதாட்டி
கழுமிய உவகையில் கவான் கொண்டிருந்து-பழைய தவமுதியோளாகிய அச் சம்பாபதி
கலந்த பேருவகையினோடு காவிரிப் பாவையைத் தன் துடைமீ திருத்திக் கொண்டு,
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள்-தெய்வலோகம்
ஆறினுமுள்ள அறுவகைத் தெய்வகண பிண்டங்களையும் பிரமலோகம் இருபதினுமுள்ள இருபது
வகைப் பிரமகண பிண்டங்களையும் செந்தாமரை மலரின் மேவிய முதியோனாகிய
பிரமன் படைத்த அந்நாளில், என்பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர்
- என் பெயர்ப்படச் செய்த பெரும் புகழையுடைய இத் தொன்னகரை, நின் பெயர்ப்படுத்தேன்
நீ வாழிய என - நின் பெயருடையதாக்கினேன் நீ வாழ்வாயாக என்றுரைத்தலான்,
இருபாற் பெயரிய உருகெழு மூதூர் - சம்பாபதி காவிரிப்பூம்பட்டினம் என்னும்
இருவகைப் பெயரினை யுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தை யுண்டாக்கும் தொல்பதியில்
;
வேற்று வேந்தர் அணுகாமையாற் சோழர்குலக் கொடியாயுள்ளான்
என்க ; கவேரன் புதல்வியாதலிற் சோழர் குலக்கொடியென்றா ரெனலுமாம். கவேரன்
புதல்வியாதலை,
3"தவாநீர்க்
காவிரிப் பாவைதன் றாதை, கவேரனாங் கிருந்த கவேர வனமும்" என மேல் உரைத்தலானறிக.
தான் நிலை திரியாமை - என்றும் நீர் வற்றாமை. தமிழ்ப் பாவை யென்றது
காவிரியை. தொழுதனள் : முற்றெச்சம். தெய்வலோகம் ஆறு எனவும், பிரமலோகம்
இருபது எனவும் புத்த நூல்கள் கூறும். செம் மலர் முதியோன் - பெரும் பிரமன்.
என் பெயர்ப் படுத்த என்றமையால் சம்பாபதி என்பது சம்புத் தீவத் தெய்வத்திற்கும்,
1
சிலப். 10-148. 2 தொல்.
பாயிரவுரை. 3
மணி.
3: 55-6.
|